திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சேலத்தில் பரபரப்பு... 12 ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி... காரணம் என்ன... மாவட்ட ஆட்சியர் விளக்கம்!!
சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கோகிலவாணி என்ற மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவியின் செயலில் சில மாற்றங்கள் இருந்துள்ளது.
இந்நிலையில் சில நேரம் மௌனமாக இருந்த கோகிலவாணி திடீரென பள்ளியின் 2 வது மாடியிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கு திரண்ட பள்ளி ஆசிரியர்கள், படுகாயமடைந்த மாணவியை உடனடியாக மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இச்சம்பவம் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளரை சந்தித்து பேசியுள்ளார்.
அதில் பள்ளி மாணவியிடம் முழுமையாக விசாரித்துவிட்டோம். குடும்பப் பிரச்சினை காரணமாகவே மாணவி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் இதற்கு காரணம் இல்லை என்றும் தன்னுடைய இந்த தற்கொலை முயற்சிக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மாணவி கூறியுள்ளார்.