ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10ல் தொடக்கம்.!
தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 8 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
கடந்த மார்ச் 13ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், ஏப்ரல் மாதம் 3ம் தேதியான நேற்றுடன் நிறைவு பெற்றன. இதனால் விடைத்தாள் திருத்தும் பணி அடுத்தகட்டமாக தொடங்கப்படவுள்ளது.
ஏப்ரல் 10ம் தேதி தொடங்கும் விடைத்தாள் திருத்தும் பணிகளை 11 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 21ம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெரும். மே மாதம் 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.