திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கல்விக்கட்டணம் செலுத்தாததால் சோகம்.. தேர்வு தொடங்கவுள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.!
கல்வி கட்டணம் செலுத்த முடியாத விரக்தியில், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
சென்னையில் உள்ள புழல், லிங்கம் தெருவில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். இவர் தையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பிருந்தா (வயது 17). இவர் மாதவரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து இன்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பிருந்தா பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தனது தந்தையிடம் கேட்டதற்கு, இன்னும் ஒரு வாரத்தில் கட்டணத்தை செலுத்தி விடலாம் என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லையே என்ற ஒரு விரக்தியில் பிருந்தா தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பின் இதுகுறித்து தகவல் அறிந்த புழல் காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தற்கொலைக்கு கல்வி கட்டணம் செலுத்தாதது மட்டும்தான் காரணமா? இல்லையெனில் வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணங்களிலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.