#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கண்டெய்னர் லாரியும், சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! துடிதுடித்து 13 பேர் பலி!
திருப்பூர் மாவட்டம் அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியும், கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், கோர விபத்து ஏற்பட்டு பலர் பலி ஆகியுள்ளனர். பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
#KSRTC Volvo Service from #Bengaluru to #Kochi met with an accident at #Avinashi, #Coimbatore. Seven passengers feared to death. Officials from #Palakkad will reach soon at the accident spot. #Accident #Coimbatore #Bus pic.twitter.com/G5GjluxOc4
— Pratheesh G Nair (@PratheeshGN) February 20, 2020
அங்கு நடந்த கோர விபத்தில், பேருந்து நிலைகுலைந்து பேருந்தில் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில், விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.