கோவை: 14 வயது சிறுமி பலாத்காரம் & கருக்கலைப்பு.. ஆட்டோ ஓட்டுனரின் அதிர்ச்சி செயல்..! பள்ளிக்கு ஆட்டோவில் மகளை அனுப்பும் பெற்றோரே கவனம்.!



14-year-old-girl-impregnant-and-aborted-by-auto-driver

 

 

பள்ளி வாகனங்களில் மட்டுமல்லாது, தனியார் வாகனத்திலும் குழந்தைகளை கல்வி நிலையத்திற்கு அனுப்பினால், தினமும் அவர்களின் செயல்பாடுகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அன்றைய நாளில் நடந்த விஷயங்களை கேட்டறிந்து, உங்களின் மகளுக்கு முதலில் என்ன நடக்கிறது என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல, இன்றைய இணையஉலகில் குழந்தைகள் பெற்றோரின் பாசத்தை வீடியோ பார்த்து எதிர்பார்க்கிறது. அதனை பூர்த்தி செய்யுங்கள். இல்லையேல், அதனை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்தும் கயவர்கள், சிறுமிகளின் எதிர்காலத்தை மடைமாற்றமும் முயற்சிக்கலாம்.

 

இதையும் படிங்க: செவிலியரை விடுதியில் புகுந்து கத்தியால் குத்திய இளைஞன்; கோவையில் பரபரப்பு சம்பவம்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தௌபீக் உமர் (வயது 21). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் வசித்து வரும் பகுதியில், பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகளை தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று, பின் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது இவரின் வேலை என கூறப்படுகிறது. 

பாலியல் அத்துமீறல்

இதனிடையே, இவரின் ஆட்டோவில் பயணம் செய்த 14 வயதுடைய மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்திய தௌபீக், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் கர்ப்பமானதாகவும் கூறப்படும் நிலையில், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக தெரியவருகிறது.

Coimbatore

ஒன்றரை ஆண்டுகளாக கொடுமை

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுமி பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்டுள்ளார். இந்த விஷயம் குறித்து கிடைத்த தகவலின்பேரில், சிறுமியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

தமுமுக நவம்பரில் போராட்டம்

விசாரணையில் உண்மை அம்பலமானதைத்தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர் தௌபீக்கை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, கடந்த நவம்பர் மாதம் தௌபீக் மீது காவல்துறையினர் பொய்யான குற்றசாட்டுகளை கூறி, காவல் நிலையத்தில் வைத்து அப்பாவி இளைஞனை துன்புறுத்தியதாக தௌபீக்கு ஆதரவாக அவரின் அம்மா, சில இயக்கங்கள் போராட்டம் முன்னெடுத்தன. 

இவர்களின் போராட்டத்தால் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். இதனிடையே, 3 மாதங்கள் கழித்து போக்ஸோ வழக்கில் தௌபீக் கைதாகியுள்ள நிலையில், அவர் ஒன்றரை ஆண்டுகளாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. 

காவல் ஆய்வாளர் பொய்யான தகவலால் பணியிடமாறுதலை எதிர்கொண்டதாக புகார் தெரிவிக்கும் நபர்:

இதையும் படிங்க: கஞ்சா வழக்கில் கைதான மகன்.. தீக்குளித்து உயிரைவிட்ட தந்தை.. கோவையில் நேர்ந்த சோகம்.!