மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடரும் மர்ம மரணங்கள்.. வீட்டிலேயே மயங்கி விழுந்த பள்ளி மாணவி உயிரிழப்பு!
சமீப காலமாக இளம் வயதினர் ஹார்ட் அட்டாக்கால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதன்படி, விளையாட்டு வீரர்கள், நாடக கலைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முறிக்காசேரி பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு, பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அவரை மீட்ட பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதினர் அடுத்தடுத்து ஹார்ட் அட்டாக்கால் உயிரிழக்கும் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.