திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
16 சிறுமி கருக்கலைப்பு விவகாரம்.. திமுக பேரூராட்சி தலைவி கைது.!
ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து வந்த 16 வயது சிறுமியும் ,17 வயது சிறுவனும் காதலித்து வந்துள்ளனர். இதில் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் சிறுமி கர்ப்பமானார்.
இந்த நிலையில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக மாணவனின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து சிறுவனை உறவினரான திமுக பேரூராட்சி தலைவி அமுதா உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்துள்ளனர்.
அப்போதே சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய மறுப்பு தெரிவித்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து விஷயம் வெளியே வர மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரி அடிப்படையில் சிறுவனின் பெற்றோர் மற்றும் திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவி அமுதாள் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.