#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆடு மேய்க்க சென்ற சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்... அண்ணன், தம்பி அதிரடி கைது.!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 1 படித்து வந்த மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக அண்ணன், தம்பி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் மீது காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
மாமா வீட்டில் தங்கிப் படித்த மாணவி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி தனது மாமா வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். மேலும் அந்த மாணவி வீட்டில் உள்ள ஆடுகளை மெய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மாமா குடும்பத்திற்கும் உதவி வந்திருக்கிறார்.
கூட்டு பாலியல் பலாத்காரம்
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆடு மேய்க்க சென்ற மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதான ராமஜெயம் மற்றும் 31 வயதான அவரது தம்பி பவுன் குமார் ஆகியோர் சேர்ந்து பலாத்காரம் செய்தனர். மேலும் இதனை பார்த்த செல்வராஜ் என்று 57 வயது நபரும் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: விபரீதத்தில் முடிந்த சமூக வலைதள நட்பு.!! 23 வயது பெண் பாலியல் பலாத்காரம்.!! 68 வயது முதியவர் கைது.!!
போக்சோ சட்டத்தில் கைது
இது குறித்து மாணவியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் தலைமறைவாக இருந்த ராமஜெயம், பவுன் குமார் மற்றும் செல்வராஜ் ஆகிய நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தது.
இதையும் படிங்க: பெண்ணிற்கு ஆபாச படம் அனுப்பி 4 லட்ச ரூபாய் பறிப்பு.!! பயிற்சியாளர்கள் மீது பரபரப்பு புகார்.!!