மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடுமையிலும் கொடுமை... 16 வயது சிறுமியை 6 மாதங்களாக கற்பழித்த காம கொடூரன்கள்!!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தரகம்பாடி அருகே உள்ள தனது தாத்தாவின் இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள சோளக்காட்டில் ஆடு மேய்த்துள்ளார்.
அப்போது பெரியசாமி என்ற நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பார்த்த சிறுமியின் சித்தப்பா முறையுடைய நபர் ஒருவரும் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அதே பகுதியை சேர்ந்த சஞ்சீவ் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் அவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதே போல் தொடர்ந்து ஆறு மாதங்கள் மூன்று பேரும் மாறி மாறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து போலீசார் உதவியுடன் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் மூன்று பேரும் 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமாகியுள்ளது.
அதனையடுத்து போலீசார் அந்த மூன்று பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் மூன்று பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் கிளை சிறையில் அடைத்தனர்.