மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது சிறுமி மிரட்டி பாலியல் பலாத்காரம்.. 60 வயது கூலித் தொழிலாளி கைது.!
அரியலூர் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (வயது 60). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனையடுத்து சிறுமி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அழுது கூறியுள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப்பதிவு செய்த போலீசார் காந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.