மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்ஸ்டாகிராம் மூலம் காதல்.. 16 வயது சிறுமி கடத்தல்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
கன்னியாகுமரி மாவட்டம் நந்தன்விளை பகுதியை சேர்ந்தவர் அபிஷேக். இவர் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் குளச்சல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் நட்பாக பேசி, அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி காதலித்து வந்துள்ளார்.
இந்த சிறுமி தையல் வகுப்புக்கு சென்று வந்த போது அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தையல் பயிற்சி வகுப்புக்கு சென்ற சிறுமி காணாமல் போயுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் சிறுமிக்கு அபிஷேக் என்ற இளைஞருடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஓசூரில் தங்கி இருந்த அபிஷேக்கை கைது செய்து, அவருடன் இருந்த சிறுமியை மீட்டு குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் இளைஞர் ஆசை வார்த்தை கூறி ஓசூருக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.