திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆர்.டி.ஓ தீவிர வாகன சோதனை: விதிகளை மீறி இயங்கிய 17 வாகனங்கள் பறிமுதல்..!
விதிகளை மீறி இயக்கப்பட்ட 15 வேன்கள் உள்பட 17 வாகனங்கள் ஆர்.டி.ஓ சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் ஆர்.டி.ஓ மற்றும் போலீசார் இணைந்து நடத்திய வாகன சோதனையின் போது விதிகளை மீறி இயக்கப்பட்ட 15 வேன்கள் உள்பட 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள பாப்பனபள்ளியில் கடந்த திங்கட்கிழமை தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனையடுத்து, ஆம்பூர் பகுதியில் விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் விதமாக போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அம்பூர் டி.எஸ்.பி , ஏ.டி.எஸ்.பி குமார், சரவணன் மற்றும் ஆர்.டி.ஓ உள்ளிட்டோர் ஆம்பூர், தேவலாபுரம் மற்றும் உமராபாத் பகுதிகளில் செருப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை சோதனையிட்டனர்.
அப்போது, விதிகளை மீறி வாகனங்களை இஉள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.