மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவசர அவசரமாக 17 வயது சிறுமிக்கு நடந்த திருமணம்! முதலிரவு அறைக்கு சென்ற மாப்பிளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் வசித்துவந்தவர் மாடசாமி. இவரது 17 வயது மகள் தக்கலை அருகே கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தினமும் கல்லூரிக்கு நடந்து சென்றபோது சாலையோரத்தில் நடைபாதை வியாபாரியாக இருந்த 22 வயது சுதீஷ் என்பவருடன் சிறுமிக்குப் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் பல இடங்களுக்கு சுற்றித்திரிந்து தங்களது காதலை வளர்த்துள்ளனர். மேலும் கொரோனோவால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து மாடசாமிக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மகளை கண்டித்து வீட்டில் தனிமைபடுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி அவசர அவசரமாக சென்னையில் பணியாற்றி வந்த விவேக் என்ற 36 வயது நபருடன்,கடந்த14ஆம் தேதி தனது மகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார். மேலும் இந்த திருமணத்தில் இஷ்டமில்லை என அந்த சிறுமி பலமுறை கூறியும், அவர் அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு அன்று முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது முதலிரவு அறைக்கு விவேக் சென்றபோது அங்கு அப்பெண் தனது காதலனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவேக்கிடம் சிறுமி தனது காதல் விவகாரங்கள் குறித்து கூறியுள்ளார். அனைத்தையும் கேட்டு மனமுடைந்த விவேக் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இதற்கிடையில் தனது காதலன் அந்த சிறுமி தனது காதலி சுதீஷுக்கு போன்செய்து, வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அவரும் சுவர் ஏறி குதித்து வீட்டின் உள்ளேவந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவேக்கின் பெற்றோர்கள் போலீசாருக்கு தகவலளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீவிர விசாரணைக்கு பிறகு 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை கட்டாய திருமணம் செய்து வைத்ததற்காக தந்தை மாடசாமி, விவேக், காதலன் சுதீஷ் மற்றும் விவேக்கின் பெற்றோர் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.