மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: இன்று 2 தூத்துக்குடி, நெல்லையில் பொதுவிடுமுறை, கூடுதலாக 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.!
தென் தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.
கடந்த 1991ம் ஆண்டுக்கு பின்னர் பெய்த பெருமழை காரணமாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் முற்றிலும் ஸ்தம்பித்துப்போயின. ஊரெங்கும் வெள்ளம் புகுந்ததால், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் செயல்படாது.