மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 நாட்கள், 19 வயது இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு... பெண் உட்பட 3 பேர் கைது... காதலனுக்கு வலைவீச்சு.!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 19 வயது இளம் பெண் தன் காதலன் உட்பட மூன்று நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை மூன்று பேரை கைது செய்துள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ள அந்தப் பெண்ணின் காதலனை தொலைபேசி தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் கரண். இவர் அதே பகுதியைச் சார்ந்த 19 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியிருக்கிறார். மேலும் அந்த இளம் பெண்ணை வெண்ணிலா(25) என்பவரது வீட்டிற்கு வரச் சொல்லி இருக்கிறார்.
தனது காதலனை நம்பி அங்கு சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அந்த வீட்டில் அவரது காதலன் கரணுடன் இருந்த அவரது நண்பர்களான தினேஷ் குமார்(20) மற்றும் கணேஷ்குமார்(33) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மூன்று நாட்கள் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து இருக்கின்றனர்.
பின்னர் அவர்களது பிடியிலிருந்து தப்பி சென்ற பெண் நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறை வெண்ணிலா கணேஷ் குமார் மற்றும் தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்தது. மேலும் தலைமறைவாக உள்ள கரணை தீவிரமாக தேடி வருகின்றனர். இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.