மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அனுமதி..
தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, குறைந்தது 150 மருத்துவ பணியாளர்களை வைத்திருக்கும் தனியார் மருத்துவமனைகளும், கோவின் செயலியில் பதிவு செய்துள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடலாம் என தமிழக அரசின் பொது மருத்துவம் மற்றும் தடுப்பு மருந்து துறை ஆணை பிறப்பித்துள்ளது.
இதன்மூலம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 66 மருத்துவமனைகளுக்கும், தமிழகத்தில் மேலும் பல மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.