மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லாரியை முந்த முயற்சித்து உயிரை விட்ட வாலிபர்கள்.. அரசு பேருந்து மோதி பரிதாப பலி..!!
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரின் மகன் வசந்தபிரசாத் (வயது 22). வசந்த பிரசாத்தின் நண்பர் வைத்தியகவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பூமலை என்பவரின் மகன் யுவராஜ் (வயது 22).
இவர்கள் இருவரும் வாழப்பாடியில் இருந்து பெரிய கிருஷ்ணாபுரம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். இவர்களின் வாகனம் கொட்டவாடி பிரிவு அருகே வந்த போது, லாரியை முந்த முயற்சித்துள்ளனர்.
இதில் ஆத்தூரிலிருந்து சேலம் நோக்கி வந்த அரசுபேருந்து இவர்களின் வாகனம் எதிர்பாராதவிதமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இரண்டு இளைஞர்களும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.