திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரௌடியை கொன்று, காவலர்கள் மீது கையெறிகுண்டு வீச்சு: 2 ரௌடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.!
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த பிரபல ரவுடியான பிரபாகரன் நேற்று நடுரோட்டில் நான்கு பேர் கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
ரவுடி பிரபாகரனின் மீது பல்வேறு கொலை வழக்குகள் இருக்கும் நிலையில், தேமுதிக பிரமுகர் ஒருவரின் கொலையில் முக்கிய குற்றவாளியாக அவர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபாகரனை கொலை செய்துவிட்டு காஞ்சிபுரம் புதிய ரயில்நிலையத்திற்கு அருகில் பதுங்கியிருந்த இரண்டு ரவுடிகள் குறித்த தகவல் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவர்களை கைது செய்ய முற்படும்போது, காவல்துறையினரிடம் இருந்து தப்பிச்செல்ல நினைத்து இருவரும் கையெறிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில், இருவரும் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இருவரின் உடலும் மீட்கப்பட்டு காவல்துறையினரால் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.