கொரோனா ஊரடங்கு! எந்த வீட்டில் தங்குவது! இரண்டு பொண்டாட்டிகாரருக்கு இப்படியொரு சோதனையா!



2-wife-husband-struggled-by-corono-lockdown

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 35 வயது நிறைந்த நபர் ஒருவர் சொந்தமாக ஆயத்த ஆடை தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு அதே சேர்ந்த பெண் ஒருவருடன்  திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அந்த நபர் தனது முதல் மனைவிக்கு தெரியாமல் கடந்த ஆண்டு மற்றொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

இந்த விவகாரம் நாளடைவில் தனது முதல் மனைவிக்கு தொியவந்த நிலையில் இருபெண்களின் குடும்பத்தாருக்குமிடையே சமூக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து அந்த நபர் முதல் மனைவி வீட்டில் ஒருவாரம், இரண்டாவது மனைவி வீட்டில் அடுத்த வாரம் தங்குவது என முடிவெடுக்கப்பட்டது. இதனை அவரது 2 மனைவிகளும், குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர் தங்கி வந்துள்ளார்.

Corono lockdown

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்நிலையில் அந்த நபர்  ஒரு வாரத்திற்கும் மேலாக  2வது மனைவியின் வீட்டில் தங்கியுள்ளார். ஒரு வாரம் முடிவுக்கு வந்த பின்னர் அவரது முதல் மனைவி தனது வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த வாலிபர், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வெளியே வர முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது முதல் மனைவி இதுகுறித்து மகளிர் உதவி மையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து  அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு அவர்களது  குடும்ப பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  இருமனைவிகளின் நிலைமையை சமாளிக்கமுடியாமல் அந்த வாலிபர் தனது நண்பர் ஒருவரின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.