சிறுவனுக்கு கட்டாயப்படுத்தி போதை ஊசி.! இளைஞருக்கு ஊர்மக்கள் கொடுத்த தண்டனையால் பரபரப்பு!!



2 youngsters give drug injection for 10 year boy

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் நித்தியானந்தம். கூலித் தொழிலாளியான இவரது மகன் ராகுல். தற்போது 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். கோடை விடுமுறை என்பதால் அவர் தனது விளைநிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார்.

சிறுவனுக்கு போதை ஊசி

அப்பொழுது அந்த வழியாக சென்ற இரு இளைஞர்கள் ராகுலுக்கு போதை ஊசியை காட்டி இதை போட்டுக் கொண்டால் ரொம்ப நன்றாக இருக்கும் என கூறியுள்ளனர். ஆனால் அவர் ஊசி போட்டுக் கொள்ள மறுத்துள்ளார். இருப்பினும் அவர்கள் கட்டாயப்படுத்தி பிடிவாதமாக சிறுவன் ராகுலுக்கு போதை ஊசி போட்டுள்ளனர். அதனால் சிறுவன் கூச்சலிட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து துரத்தியுள்ளனர்.

drug

கட்டிவைத்து தர்மஅடி

ஒருவர் தப்பிச் சென்ற நிலையில், மற்றொரு வாலிபரை ஊர்மக்கள் பிடித்துள்ளனர். மேலும் அவரை மின்கம்பியில் கட்டிவைத்து ஒன்றாக கூடி தர்ம அடி கொடுத்துள்ளனர். இந்த நிலையில் விவரமறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் அந்த இளைஞரை மீட்டுள்ளனர். மேலும் அவரிடம் விசாரித்தபோது அவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பதும், ஆரணிக்கு உறவினர் வீட்டிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார். சிறுவன் ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.