மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் 2 இளைஞர்கள் கைது: திருச்சி அருகே பரபரப்பு..!
திருச்சி மாவட்டம், துறையூர் வனச்சரக அலுவலர் பொன்னுசாமி தலைமையில் சோபனபுரம் பிரிவு வன ஆய்வாளர் சியாம் சுந்தர், வனக்காப்பாளர்கள் அடங்கிய குழுவினர் துறையூர் அருகேயுள்ள பச்சைமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, காஞ்சேரிமலை அருகே 2 பேர் டார்ச் லைட்டுகளுடன் சுற்றித்திரிந்தனர்.
இதனை கண்ட வனத்துறையினர் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் மாயம்பாடி பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் பிரபு என்பது தெரியவந்தது. மேலும் அவர்களை சோதனை நடத்தியதில் நாட்டு துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பால்ரஸ் குண்டுகள் வைத்து இருந்தனர்.
இதனையடுத்து, இருவரும் வன விலங்குளை வேட்டையாட வந்து இருந்தது தெரியவந்தது. இதனை தொடார்ந்து வனத்துறையினர் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களுக்கு துறையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.