திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இளம்பெண் தற்கொலை., நிர்கதியான 3 மாத கைக்குழந்தை..!!
கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் அருகே விளத்தொட்டி ஆதிதிராவிடர் தெரு உள்ளது. அங்கு ராஜா என்பவர் அவரது மனைவி சபிதா உடன் வசித்து வந்துள்ளார்.
20 வயதுடைய சபிதாவிற்கும் ராஜாவுக்கும் மூன்று மாத கைக்குழந்தை இருக்கின்றது. ராஜா பெங்களூரில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராஜாவுக்கும் சபிதாவுக்கும் அவ்வப்போது சண்டே ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற ராஜாவுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு செல்போன் மூலம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதனால் மனமுடைந்த சபிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த சபிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.