காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
மசினகுடியில் 200 அடி பள்ளத்தில் 2 பேர் மட்டும் உயிர் பிழைத்தது எப்படி? பரபரப்பு தகவல்..!!
தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜூட் அண்டோ கெவின், சென்னையைச் சேர்ந்த தனது நண்பர்கள் 6 பேருடன் ஊட்டி, மசினகுடி பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஊட்டியிலிருந்து மசினகுடி செல்லும் வழியில் அவர்கள் சென்ற சொகுசு கார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். இரண்டு பேர் மட்டும் இரண்டு நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஊட்டி அருகே மலைப்பாதையில் உள்ள கல்லட்டி 34–வது கொண்டை ஊசி வளைவில் அவர்கள் வேகமாக சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. 200 அடி பள்ளத்தில் மரங்கள் அடர்ந்த பகுதியில் கார் விழுந்து கிடந்ததால் அந்த பாதையில் சென்ற யாருக்கும் இதுபற்றி தெரியவில்லை. ஊட்டி சென்றவர்களிடம் இருந்து 2 நாட்களாக எந்த தகவலும் இல்லை, செல்போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த அவர்களது உறவினர்கள் இதுபற்றி ஊட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பிறகு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினர் 200 அடி பள்ளத்தில் கார் ஒன்று விழுந்து கிடப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அருகில் சென்று பார்த்தபொழுது காருக்குள் ராமராஜேஷ், அருண் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். மற்ற 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. விபத்து நடந்து 2 நாட்களுக்கு பின்னரே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
200 அடி பள்ளத்தில் விழுந்து இருவர் மாட்டும் இரண்டு நாட்களாக உயிர் பிழைத்திருந்தது எப்படி என்று அனைவருக்கும் ஆச்சர்யம் உண்டானது. இது குறித்து மீட்பு குழுவினர் கூறும்பொழுது:
சுற்றுலா பயணிகள் 7 பேர் சென்றது ஒரு சொகுசு கார் ஆகும். அதில் முன்பக்கத்தில் டிரைவருடன் சேர்ந்து 2 பேரும், அதன் பின்புறத்தில் 2 பேரும், பின்பக்க இருக்கையில் 3 பேர் என்று மொத்தம் 7 பேர் அமர்ந்துள்ளனர்.
இதில் டிரைவர் இருக்கை அருகே இருந்தவரும், பின்பக்க இருக்கையில் நடுவில் இருந்தவரும் உயிர் தப்பி உள்ளனர். கார் பள்ளத்தில் உருண்டபோது முன்பக்க இருக்கையில் இருந்தவர், இருக்கையின் கீழ்ப்பகுதிக்கு சென்றுவிட்டதால் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் குறைவு.
அதுபோன்று பின்பக்க இருக்கையில் இருந்த 3 பேரில், நடுவில் இருந்தவருக்கு காயங்கள் குறைவு. அவருக்கு இரு புறமும் ஆட்கள் இருந்ததால் அவருக்கு அதிகளவில் காயங்கள் ஏற்படவில்லை. இதனால்தான் அவர்கள் இருவரும் உயிர் தப்பி உள்ளனர்.
இந்த காரில் உயிரை காக்கும் பலூன் இருந்தாலும், முன்பக்கத்தில் இருந்தவர் சீட் பெல்ட் அணிய வில்லை என்பதால் அது விரியவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.