ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை இனி தமிழில் எழுதலாம்! மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள்!
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகாம் ஒவ்வொரு ஆண்டும் இருமுறை நடத்தி வருகிறது.
2021ஆம் ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மைத்தேர்வு தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் இந்த நுழைவுத்தேர்வு இது வரை ஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு முதல் அவரவர் தாய்மொழியிலேயே ஜே.இ.இ. முதன்மைத்தேர்வை எழுதலாம் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.