மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எங்க வீட்ட காணோம்யா, கண்டுப்பிடிச்சு கொடுங்கய்யா.. வடிவேலு பாணியில் புகார் கொடுத்த கிராம மக்கள்...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள தலையாமங்கலம் கிராம மக்கள் தங்களது வீடுகளை காணோம் என போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 2016-2019 ஆம் ஆண்டிற்கான பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்ள 225 நபர்களுக்கு, தலையாமங்கலம் ஊராட்சியில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அந்த 225 பேரில் 140 பேருக்கு வீடு கட்டித்தராமலே வீடு கட்டி விட்டதாக போலி ஆவணங்கள் தயார் செய்து 5 கோடி ரூபாய் மோடி நடந்துள்ளது. அதுமட்டுமின்றி மத்திய அரசின் கழிவறைக்கட்டும் திட்டத்தின் கீழ் 170 பேருக்கு கழிவறை கட்டாமலே கட்டியதாக போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடி நடத்தியதாக சில அரசியல் பிரமுகர்கள் மேல் புகார் கொடுத்துள்ளனர்.
அதன்படி தலையாமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், சேகர், இளவரசி, லட்சுமி உள்ளிட்ட 22 நபர்கள் தனித்தனியாக காவல் நிலையம் வந்து புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த புகாரில் பட்டாநிலத்தில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய வீடுகட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டப் பட்டுள்ளதாக அரசு பதிவேட்டில் பதிவாகிய நிலையில், எங்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டப் பட்டதாக சொல்லப்படும் வீட்டை காணவில்லை என கூறிப்பிட்டு புகார் கொடுத்துள்ளனர்.
மேலும் கட்டியதாக சொல்லப்படும் தங்களது வீட்டை நீங்கள் தான் கண்டுப்பிடித்து தர வேண்டும் என போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.