மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பர்சனல் லோன் பெற்றுத்தர மறுத்த 22 வயது பெண் மாற்றுத்திறனாளி வங்கி ஊழியர் கழுத்து நெரித்து கொலை.. நட்பாக பழகி 24 வயது இளைஞன் பயங்கரம்..!
தன்னிடம் அன்பாக பழகினாலும் பர்சனல் லோன் பெற்றுத்தர மறுக்கிறார் என்ற ஆவேசத்தில், தனியார் வங்கி ஊழியரை இளைஞன் நட்பு வலையில் தனியே அழைத்து சென்று கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், பேரிகை நெரிகம் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடசாமி. இவர் கூலித்தொழிலாளி ஆவார். வேங்கடசாமியின் மகள் பிரியங்கா (வயது 22). மாற்றுத்திறனாளியான பிரியங்கா, ஓசூர் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். பேரிகை முதுகுறிக்கி கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீதர் (வயது 24). ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
ஸ்ரீதர் பிரியங்காவை கடந்த சில மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை பாகலூர் ராமன்தொட்டி வனப்பகுதியில் பிரியங்கா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவாறு சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடலை மீட்ட பேரிகை காவல் துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுதொடர்பாக ஸ்ரீதரை கைது செய்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமானது. பிரியங்கவிடம் வெளியே சென்று வரலாம் என ராமன்தொட்டி பகுதிக்கு அழைத்து சென்ற ஸ்ரீதர், தனிமையில் அவரை கொலை செய்தது அம்பலமானது. மேலும், பிரியங்காவுடைய தந்தையை தொடர்பு கொண்டு ரூ.10 இலட்சம் பணம் கேட்டு கடத்தல் நாடகமாடி மிரட்டியும் இருக்கிறார்.
கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினரின் விசாரணையில், "தனியார் வங்கியில் லோன் பிரிவில் பணியாற்றி வந்த பிரியங்கா, தற்காலிக பணியாளராக வேலை பார்த்துள்ளார். இவர் ஓசூர் சென்று வரும்போது ஸ்ரீதர் பிரியங்காவை கவனித்து நட்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், பர்சனல் லோன் வாங்கி தரவும் கோரிக்கை வைத்துள்ளார்.
சம்பவத்தன்று தனியாக பேசவேண்டும் என பிரியங்காவை அழைத்து பாகலூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள ராமன் தொட்டிக்கு அழைத்து சென்ற ஸ்ரீதர், லோன் குறித்து பேசுகையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் கிடைக்காத விரக்தியில் ஸ்ரீதர் பிரியங்காவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.
பின்னர், அதனை கடத்தல் சம்பவம் போல சித்தரிக்க கர்நாடக மாநிலம் கோலார் தப்பி சென்ற ஸ்ரீதர், அங்கிருந்து பிரியங்காவின் தந்தைக்கு தொடர்பு கொண்டு மகளை கடத்தியதாகவும், ரூ.10 இலட்சம் பணம் வேண்டும் எனவும் கேட்டுள்ளார்" என்பது அம்பலமானது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடந்து வருகிறது.