மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தந்தை பைக் வாங்கி தராத விரக்தியில் கூல்டிங்ஸில் எலி பேஸ்ட்டை கலந்து சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு...
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியில் உள்ள பூமால் ராவுத்தர் கோயில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜின் மகன் நந்தகுமார் (22). கூலி தொழில் செய்து வரும் கோவிந்தராஜ் தான் கஷ்டப்பட்டாலும் மகன் கஷ்டப்பட கூடாது என மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நந்தகுமார் கல்லூரி படிப்பை முடித்த போதிலும் வேலைக்கு ஏதும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி திரிந்துள்ளார். அதுமட்டுமின்றி நண்பர்கள் அனைவரிடம் பைக் இருந்ததை அடுத்து தன்னிடம் மட்டும் பைக் இல்லாததால் தனது தந்தையிடம் பைக் வாங்கி தருமாறு கேட்டு தெந்தரவு செய்துள்ளார் நந்தகுமார்.
அதற்கு கோவிந்தராஜ் ஏற்கனவே நிறைய கடன் இருக்கிறது என்று கூறிவிட்டு கூடிய விரைவில் பைக் வாங்கி தருவதாக கூறி வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த நந்தகுமார் கடைக்கு சென்று எலி பேஸ்ட் மற்றும் கூல்டிரிங்ஸை வாங்கி வந்து கூல்டிரிங்ஸில் எலி போஸ்ட்டை கலந்து குடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அதனை வீடியோவாக எடுத்து தனது நண்பர்களுக்கு ஷேர் செய்துள்ளார். வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனே விரைந்து வந்து நந்தகுமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். ஒரு பைக்குக்காக இளைஞர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.