திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னடா ஒரே இரத்தமாக இருக்கும்... அருகே சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! போலீசார் விசாரணை...
சேலம், சூரமங்கலம் புதுரோடு பகுதியில் உள்ள புனைகரடு பகுதியைச் சேர்ந்தவர் ஐயம்பெருமாள். இவரது வீட்டிற்கு கணவர், மனைவி என்று கூறி கொண்டு இரண்டு பேர் புதிதாக குடி வந்துள்ளனர். இந்நிலையில் குடி வந்த மறுநாளில் இருந்தே கணவர், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று ஐயம்பெருமாளின் பக்கத்து வீட்டில் உள்ள பெண் மொட்டை மாடியில் துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஐயம்பெருமாளின் மாடியில் ஆண் நபர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனே ஐயம்பெருமாளிடம் கூறியுள்ளார்.
உடனே ஐயம்பெருமாள் ஓடி சென்று பார்த்த போது அங்கு 25 மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார் ஐயம்பெருமாள். அவர்கள் வந்து பார்த்த போது அங்கு அந்த இளைஞர் ஆண் உறுப்பு அறுக்கப்பட்டு இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடனே இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீசார் விரைந்து வந்து இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஐயம்பெருமாளின் வீட்டிற்கு புதிதாக குடியேறிய தம்பதியினர் தலைமறைவானதை வைத்து அவர்கள் தான் இந்த இளைஞரை கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.