53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
17 வயது மாணவியுடன் உல்லாசம்.!! போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கூலித் தொழிலாளி.!!
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி ஆந்திராவிற்கு அழைத்துச் சென்ற கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி வீட்டில் இருந்து காணாமல் போயிருக்கிறார். அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த தாயார் இது தொடர்பாக குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் அந்த மாணவி அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமரேசன் என்பவருடன் மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆந்திராவில் கைது
இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் குமரேசன் அந்த மாணவியை ஆந்திராவிற்கு கடத்திச் சென்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆந்திராவிற்கு சென்ற காவல்துறையினர் குமரேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு வேலூருக்கு அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மாணவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: ஸ்கூட்டர், எல்இடி டிவி, 2.5 சவரன் செயின் பரிசு; ஆசையாக பேசி விழாக்கால மோசடி.. மக்களே உஷார்.!
ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசம்
இந்நிலையில் மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த குமரேசன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஆந்திரா அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கூலித் தொழிலாளியால் மாணவி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சென்னை: சிலிண்டர் டியூப்பால் வந்த வினை; இளம்பெண் பலி.. இல்லத்தரசிகளே கவனம்.!