மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆன்லைனில் கடன் வாங்கியவரை நிர்வாணமாக மார்பிங் செய்து மிரட்டல்!! மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!!
திருவாரூர் மாவட்டம் அருகே ராஜேஷ் என்னும் இளைஞர் ஓன்லைன் மூலம் கடன் வாங்கியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 வயதான ராஜேஷ் என்பவர் கும்பகோணம் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது வருமானத்தில் தான் குடும்பம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ராஜேஷ் அடிக்கடி ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்குவதும் திருப்பி செலுத்துவதுமாக இருந்துள்ளார். இதை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் காண்பித்த லிங்கில் கடன் வழங்கும் ஆப் ஒன்றை டவுன்லோட் செய்து உள்ளார்.
அதில் 5000 ரூபாய் கடன் வாங்கியதற்கு வட்டியுடன் ஒரு வருடத்திற்கு முன்பே 20 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் ஆன்லைனில் கடன் வாங்கிய நிறுவனத்தினர் ராஜேஷை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. மேலும் ராஜேஷின் புகைப்படத்தை நிர்வாணமாக மார்ஃபிங் செய்து அதன் மூலம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேஷ் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.