திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓசூரில் அரசு பேருந்தில் தவறவிட்ட 3 1/2 லட்சம் பணம்... பத்திரமாக உரியவரிடம் ஒப்படைத்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்..!
ஓசூரில் அரசு பேருந்தில் பயணம் செய்த புருஷோத்தமன் என்பவர் தனது நிறுவனத்தில் கொடுத்து அனுப்பிய மூன்றரை லட்சம் ரூபாய் பணப்பையை பேருந்தில் தான் அமர்ந்திருந்த இருக்கைக்கு மேலே வைத்துள்ளார்.
பின்னர் தான் இறங்கும் இடம் வந்ததும் இருக்கைக்கு மேலே வைக்கப்பட்ட பணப்பையை எடுக்காமல் மறந்து இறங்கிவிட்டார். இதனையடுத்து பேருந்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் இறங்கிய நிலையில் பேருந்தின் இருக்கையின் மேலே ஒரு பை இருப்பதை கவனித்த ஓட்டுனர் தவமணி அதனை எடுத்துப் பார்த்துள்ளார்.
அப்போது அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக பேருந்து ஓட்டுனர் தவமணி அவரது மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதற்கிடையில் பணத்தை தவறவிட்ட புருஷோத்தமன் பணத்தை தேடி டிப்போவிற்கு வந்துள்ளார். பின்னர் உரிய விசாரணைக்கு பிறகு ஓட்டுனர் தவமணி பணத்தை புருஷோத்தமனிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்ட புருஷோத்தமன் ஓட்டுனர் தவமணி மற்றும் நடத்துனருக்கு மனதார நன்றி தெரிவித்து விட்டு சென்றார்.