திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலர்களை கட்டிப்போட்டு சகோதரிகள் கதற கதற பலாத்காரம்!
திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 19 வயதான சகோதரிகள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களுடன் பழகி வந்துள்ளனர். இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் இவர்கள் 4 பெரும் கடந்த மார்ச் 30ஆம் தேதி இடையகோட்டையில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு மூன்று இளைஞர்கள் இவர்களிடம் யார் நீங்கள்? எங்கிருந்து வந்துள்ளீர்கள் என கேட்டுள்ளனர். இதனிடையே இவர்கள் வீட்டுக்கு தெரியாமல் வந்ததை அறிந்த அந்த நபர்கள், இவர்களை இவர்களை மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து அந்த இளைஞர்கள் இவர்கள் 4 பேரையும் யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்றவுடன் காதலர்கள் இருவரையும் கட்டிப்போட்டு விட்டு, 2 பெண்களையும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன் பின்னர் அவர்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். காலை விடிந்ததும் வீட்டிற்கு வந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சரண்குமார், வினோத் குமார், சூரிய பிரகாஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.