திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: குளத்தில் ஆனந்த குளியல்; நீரில் மூழ்கி 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி..! சிவகங்கையில் நெஞ்சை உலுக்கும் சோகம்.!
விடுமுறை தினமான இன்று சிறார்கள் குளத்தில் குளிக்க சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள படமஞ்சி கிராமத்தில் ஊருக்கு பொதுவான குளம் உளது. இந்த குளத்தில் கடந்த பருவமழையின் போது பெய்த மழையால் நீர் நிரம்பி காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விடுமுறை நாளான இன்று குளத்தில் கிராமத்தை சேர்ந்த சிறுவர்களான மீனாட்சி (வயது 10), மகேந்த் (வயது 7), சந்தோஷ் (வயது 5) ஆகியோர் குளித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது, சிறார்கள் எதிர்பார்த்த விதமாக ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். விளையாட சென்ற பிள்ளைகள் வீட்டிற்கு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், அவர்களை தேடியுள்ளனர்.
அந்த சமயம் சிறார்களின் உடைகள், செருப்பு போன்றவை குளக்கரையில் இருந்துள்ளனர். இதனையடுத்து, பதறியபடி குளத்தில் தேடி பார்த்தபோது சிறார்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.