மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்குறிச்சி அருகே கொடூரம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராதாகிருஷ்ணன்- அன்னபூரணி. இந்த தம்பதியினருக்கு சந்தோஷ் குமார், ராஜேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சந்தோஷ்குமாருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இவர்களது இரண்டாவது மகன் ராஜேஷ் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனிடையே இவர் தினமும் இரவு தனது தாய் தந்தை மற்றும் அண்ணனுக்கு தொடர்பு கொண்டு பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜேஷ் தனது குடும்பத்தினருக்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார்.
ஆனால் யாரும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் தனது உறவினர் ஒருவருக்கு கால் செய்து தனது வீட்டிற்கு சென்று பார்க்க கூறியுள்ளார். அங்கு சென்ற உறவினர் பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்ததால் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளார்.
அங்கேயும் யாரையும் காணாததால், அருகில் இருந்தவர்களிடம் கூறி விவசாய நிலத்தில் உள்ள கரும்பு பயிர்களுக்கு இடையே சென்று தேடிப் பார்த்துள்ளனர். அப்போது அங்கு ராதாகிருஷ்ணன், சந்தோஷ் குமார் மற்றும் அன்னபூரணி ஆகிய மூன்று பேரும் உடலில் வெட்டு காயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.