திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எடுத்த விபரீத முடிவு.!
கன்னியாகுமரி மாவட்டம் அழகாபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த இயேசுநாதன் - அனிதா தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு சகாய திவ்யா என்ற மகளும், சகாய பூஜா என்ற மகளும் உள்ளனர்.
இதில் வெளிநாட்டில் ஓட்டுநராக வேலை செய்த இயேசு நாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். மூத்த மகள் திவ்யா இன்ஜினியரிங் படித்து வருகிறார். இளைய மகள் பூஜா அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கணவர் இல்லாததால் மகள்களை படிக்க வைக்கவும், வீட்டு செலவுகளை பார்த்துக் கொள்ள அனிதா தினமும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் அனிதாவுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பணக்கஷ்டத்தில் இருந்து வந்த குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு அனிதாவும் அவரது 2 மகள்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து என்ன சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அனிதா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் எனது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு தாய் என்ற முறையில் எனது மகள்களை கவனிக்க முடியவில்லை. இதனால் பணப்பிரச்சினை ஏற்பட்டு மன உளைச்சல் அதிகமானதால் நானும் எனது மகள்களும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளோம். எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என அதில் எழுதி வைத்துள்ளார்.