மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டேய் பசங்களா என்னடா பண்ணி வச்சிருக்கீங்க...? மாணவர்கள் நடத்திய துணிகர சம்பவம்..!
தேனி மாவட்டம் போடி அருகே சில்லமரத்துப்பாடியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் ஸ்கூல்லை கட்டடித்துவிட்டு ஊர் சுற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது நாளடைவில் பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு வரவே அவர்கள் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்பு வீடு திரும்பிய மாணவர்களிடம் பெற்றோர்கள் விசாரிக்கவே ஒரு கம்பளி போர்வை விற்பனை செய்யும் இளைஞரை காண்பித்து தங்களை கடத்திச் செல்ல முயன்றதாக அந்த மாணவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிவாழ் மக்கள் அந்த இளைஞரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் பள்ளிக்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் இப்படி ஒரு கடத்தல் சம்பவம் ஒன்றும் நடைபெறவில்லை என போலீசாருக்கு தெரிய வரவே போலீசார் மாணவர்களை கூப்பிட்டு விசாரித்துள்ளனர்.பின்பு போலீசார் விசாரணையில் மாணவர்கள் பெற்றோர்களுக்கு பயந்து தாங்கள் கடத்தப்பட்டதாக நாடகமாடியது அம்பலமாகியது.