மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதுச்சேரியை தொடர்ந்து.. 3 வயது சிறுவன் கால்வாயில் இருந்து சடலமாக மீட்பு.! இந்தியாவில் பெருகி வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்.!
நம் நாட்டில் குழந்தைகளின் மீதான பாலியல் அத்துமீறல்கள் நடந்த வண்ணம் உள்ளன. இவை மக்களின் மனதில் மிகுந்த தாக்கத்தை உருவாக்குகிறது. அவ்வகையில் சமீபத்தில் புதுச்சேரியில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி ஒருவர் திடீரென மாயமானார். காவல்துறையினர் 4 நாட்களாக அவரை தேடி அருகில் இருந்த கால்வாயில் இருந்து சடலமாக மீட்டனர்.
காவல்துறையினரின் விசாரணையில், வீட்டின் அருகில் வசித்து வந்த நபர்கள் அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பின், கொலை செய்து மூட்டையாக கட்டி கால்வாயில் வீசியது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அந்த சம்பவம் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் இதற்காக மக்கள் போராட்டம் நடத்தி குரல் எழுப்பி வருகின்றனர். குற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டங்கள் கடுமையாகாத வரையில் இத்தகைய குற்றங்கள் குறையாது என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் சென்னை ஊரப்பாக்கம் பகுதியிலும் இன்று அரங்கேறியுள்ளது. 3 வயது சிறுவன் நேற்று மாலை மாயமானதை தொடர்ந்து, இன்று அவரது உடல் அருகில் இருந்த கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் இது குறித்த தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.