திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தந்தை கண்முன்னே பெண்ணை மானபங்கம் படுத்திய 4 பேர்!!
கடலூர் பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண் ஒருவர் சம்பவ தினத்தன்று சாலையில் வழக்கம் போல் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அந்த நேரம் ராசபேட்டையை சேர்ந்த குணா என்னும் வாலிபர் இந்தப் பெண்ணே பின் தொடர்ந்து வந்துள்ளார்.
பின்னர், பெண்ணிடம் அவரது தொலைபேசி எண்ணை கேட்டு தொல்லை செய்துள்ளார். ஆனால் அந்தப் பெண் தொலைபேசி எண் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குணா அந்தப் பெண்ணை சாலையில் வைத்து திட்டியுள்ளார்.
இதனால், வீட்டிற்கு திரும்பிய அந்தப் பெண் இது தொடர்பாக அவரது தந்தையிடம் கூறியுள்ளார். பின்னர், தந்தை அவரது மகளுடன் சேர்ந்து குணாவிடம் சென்று இது குறித்து கேட்டபோது குணா அவருடைய நண்பர் வீட்டில் இருந்தார்.
உடனே அவருடன் இருந்த நாலு பேர் வந்து, தந்தை கண்முன்னரே அந்தப் பெண்ணை தாக்கி மானபங்கம் செய்துள்ளனர். இதனால் அந்தப் பெண் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
பின்னர் இது குறித்து கடலூர் துறைமுகம் காவல்துறையினர் குணா உட்பட அவரது நண்பர்கள் நாலு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.