மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்காக காரில் சென்ற குடும்பத்தினர்.! திடீரென ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாப பலி.!



4-people-died-in-car-accident

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்பட்டியை சேர்ந்தவர் கருப்பன். விவசாயியான இவர் நேற்று தனது பேத்திக்கு மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்காக அவரது வீட்டில் இருந்து பழனி அருகே உள்ள பாப்பம்பட்டிக்கு அவரது மனைவி மற்றும் மூன்று உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார்.

அவர்கள் சென்ற கார் நெய்க்காரப்பட்டியை அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காருக்குள் இருந்த கருப்பன் அவரது மனைவி முத்தம்மாள், மற்றும் இரண்டு உறவினர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

car accident

காரில் பயணம் செய்த கருப்பனின் உறவினர் மகாலட்சுமி என்பவர் மட்டும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த மகாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நடந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்காக காரில் சென்றபோது விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.