கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இரண்டு நாட்களாக தீராத வயிற்று வலியால் துடித்த 4 வயது சிறுவன்... பரிசோதனையில் மருத்துவர்கள் அதிர்ச்சி!!
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மிகவும் சுட்டி தனமாகவும், துறுதுறுவென சுற்றி திரிந்து வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை பார்த்து கொள்வதே பெரிய வேலையாக இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்றும் எப்படி நடந்து கொள்வார்கள் என்று தெரியாது.
சில குழந்தைகள் பிறந்தது முதல் சுட்டி தனமாகவே இருப்பார்கள் அவர்களை கவனித்து கொள்வது என்பது பெற்றோர்களுக்கு அவ்வளவு எளிதல்ல. அந்த வகையில் 4 வயது சிறுவன் ஒருவன் இரண்டு நாட்களாக அடிவயிற்றில் வலி இருப்பதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளான்.
அதனையடுத்து பெற்றோர் அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனையை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுவனது வயிற்றில் இரும்பு கைச்செயின் இருந்துள்ளது. பின் அறுவை சிகிச்சை மூலம் சிறுவனது வயிற்றில் இருந்த கைச்செயினை அகற்றியுள்ளனர்.