மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரயில்வே பாலத்தின் மேல் அமர்ந்து மது அருந்திய நபர்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள கழுவன் திட்டை பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மது அருந்திய போது எதிர்பாராத விதமாக ரயில்வே பாலத்திலிருந்து தவறி சுமார் 60 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிருக்கு போராடி கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உயிருக்கு போராடிய நபரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஸ்டச்சரில் சுமந்தபடி மேல் பகுதிக்கு அழைத்து வந்து அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அந்த நபர் மருதங்கோடு பகுதியை சேர்ந்த சிங் என்பது அவர் தண்டவாளத்தின் மேல் அமர்ந்து மது அருந்தும் போது தவறி விழுந்ததாக தெரியவந்துள்ளது.