அரசு கல்லூரிகளாக மாற்றப்படும்... 41 பல்கலை உறுப்பு கல்லூரிகள்; தமிழக அரசு அரசாணை வெளியிட்டது..!!



41 university member colleges will be converted into government colleges; Government of Tamil Nadu has issued an ordinance..!!

தமிழகத்தில் 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை, அரசு கல்லூரிகளாக மாற்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்டு வந்த 41 கல்லூரிகள் நேரடியாக தமிழக அரசின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் கல்லூரிகளில் ஆசிரியர் இலாலாத பணியிடங்களை நிரப்பி அதற்கான செலவினங்களுக்கு நிதி ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும் இந்த கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலை செய்யக்கூடிய 10 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளம் அந்தந்த மண்டல இணை இயக்குநர் மூலமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.