53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அடக்கொடுமையே... 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.!! போக்சோவில் கைது செய்யப்பட்ட 41 வயது தந்தை.!!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு மாணவி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் தந்தையான 41 வயது நபர் டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். சிறுமியின் தாயார் தனியார் நிறுவனம் ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார்.
கோடை விடுமுறையில் பாலியல் தொல்லை
சிறுமியின் தாயார் பணிக்கு சென்று திரும்பி வருவதற்கு இரவு 9 மணி ஆகி விடும் என்பதால் சிறுமி தனியாக வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது சிறுமியின் தந்தை அவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் சிறுமி மிகுந்த மனவேதனை அடைந்திருக்கிறார்.
இதையும் படிங்க: திருச்சி அருகே பயங்கரம்... முசிறியை அதிர வைத்த இரட்டை கொலை.!! காவல் நிலையத்தில் சரணடைந்த கொலையாளி.!!
காவல்துறையில் புகார்
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததும் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சிறுமி தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இவரது புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அதிரடி நடவடிக்கை... கர்ப்பிணி பெண்களை ஒரே ஸ்ட்ரக்சரில் அழைத்துச் சென்ற சர்ச்சை.!! பெண் ஊழியர் சஸ்பெண்ட் .!!