மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தரம்.. ஒரே அரசு பள்ளியில் படித்த 5 மாணவிகள் மருத்துவ படிப்பிற்கு தேர்வு..! அரசு பள்ளிக்கு குவிந்துவரும் பாராட்டு.!
தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஒரே பள்ளியில் படித்த 5 மாணவிகளுக்கு மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு மருத்துவ கல்வியில் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டது. இதில் அரசு ஒதுக்கீடான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தென்காசி மாவட்டத்தில் 16 மாணவ மாணவிகள் தேர்வாகியுள்ளனர். இவர்களில் செங்கோட்டை எஸ். ஆர். எம். அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த 5 மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர்.
மாணவி லோகேஸ்வரி என்பவருக்கு திருச்சி மருத்துவக் கல்லூரியிலும், சுபஸ்ரீ என்பவருக்கு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியிலும், சீதா தேவிக்கு வடக்கன்குளம் ராஜா பல் மருத்துவக் கல்லூரியிலும், ஐஸ்வர்யாவுக்கு அரியலூர் மருத்துவ கல்லூரியிலும், பாத்திமா சைனியாவுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியிலும், சவுதா அப்ரைன் என்ற மாணவிக்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
இந்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணி, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். ஒரே பள்ளியில் படித்து மருத்துவ கல்விக்கு 56 பேர் தேர்வு பெற்றமைக்கு செங்கோட்டை நகர மக்கள் அரசு பள்ளிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.