திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. மாயமான சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!
தர்மபுரி அருகே உள்ள மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மன்மதன்-சீதா தம்பதியின் 10 வயது மகன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் வீட்டை விட்டு வெளியே விளையாட சென்றுள்ளான். நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால், மகனை பல இடங்களில் தேடியுள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சிறுவனின் வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் சிறுவன் சடலமாக மிதந்திருக்கிறான்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித்தரும் உண்மை வெளியே வந்துள்ளது.
அதன்படி, சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த சிறுவனை தனியாக அழைத்துச் சென்று இளங்கோ பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போதே சிறுவன் சத்தம் போட்டதால், ஆத்திரமடைந்த இளங்கோ சிறுவனை கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து இளங்கோவை கைது செய்த போலீசார் மேற்கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம் அடங்குவதற்குள் அதேபோல் சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.