குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
சேலத்தில் பரபரப்பு: மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்...ஆத்திரத்தில் மகன் செய்த பரபரப்பு சம்பவம்.!
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே விருதாசம்பட்டி கருப்புகவுண்டன்காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் - லட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு வீரமணி, நரசிம்மன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜேந்திரன் தனது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எளையம்பாளையத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீரமணிக்கு விருதாசம்பட்டியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். மாமனார் ராஜேந்திரன் அடிக்கடி தனது மருமகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து தனது கணவர் வீரமணியிடம் அந்த பெண் கூறியுள்ளார்.அதனையடுத்து வீரமணி மற்றும் அவரது மனைவி இருவரும் விருதாசம்பட்டி கருப்புகவுண்டன் காட்டுவளவிற்கு தனிக்குடித்தனம் வந்துள்ளனர்.
அங்கும் அவ்வப்போது வந்து மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வநுதுள்ளார் ராஜேந்திரன். இதனால் கோபமான வீரமணியின் மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இரவில் வீரமணியின் வீட்டிற்கு வந்த ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மருமகளை பற்றி அவதூறாக பேசியுள்ளார்.
இவை அனைத்தும் தப்பு அப்படி பேசாதீர்கள் என்று வீரமணி கூறியும் நிறுத்தாமல் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரமணி வீட்டிற்கு முன்பு இருந்த கடப்பா கல்லை எடுத்து ராஜேந்திரனின் இரண்டு கால் மீதும் போட்டுள்ளார். பின் அவரது தலையில் கட்டையால் தாக்கியுள்ளார். அதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நங்கவள்ளி போலீசார், ராஜேந்திரன் உடலை உடற்கூறாய்விற்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.