மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருச்சியில் பரபரப்பு... 56 பேர் அதிரடி கைது.! ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக கட்சியினர்.! ?
தமிழகத்தில் சில காலமாகவே டாஸ்மாக் மதுபான கடைகளில் மது வாங்கி குடிப்பவர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தஞ்சை மாவட்டத்தை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியிலும் டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருச்சி மாநகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சன் குறிச்சியில் அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபான கடையில் மது வாங்கி குடித்து இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி லால்குடி ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர் பாரதிய ஜனதா கட்சியினர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இரண்டு பெண்கள் உட்பட 56 பேரை அதிரடியாக கைது செய்திருக்கிறது திருச்சி மாநகர காவல் துறை. கைது செய்யப்பட்ட அனைவரும் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.