மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாய் தகராறாக ஆரம்பித்து கைகலப்பாகி கொலையில் முடிந்த சோகம்... நிலத்தகராறால் நிகழ்ந்த விபரீதம்...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொல்லிமேடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயான ரவி(60). இவருக்கு இவரது அண்ணன் கோவிந்தசாமியின் குடும்பத்திற்கு இடையே நிலத்தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவி தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற கோவிந்தராஜின் மகன் ராஜேந்திரன் நிலத்தகராறு குறித்து ரவியிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ராஜேந்திரன், ரவியை கடுமையாக தாக்கியுள்ளார். உடனே படுகாயமடைந்த ரவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ரவி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.