மக்களே உஷார்... பிரியாணி கடையில் 1,2 அல்ல 65 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்... வடபழனியில் பரபரப்பு!!



65-kg-spoiled-meat-added-to-briyani

சென்னை வடபழனியில் உள்ள யா மொகிதீன் பிரியாணி கடையில் கடந்த சில நாட்களாகவே உணவின் தரம் குறைந்து வருவதாக தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்கள் எழுந்துள்ளன.

அந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சதிஷ்குமார் தலைமையில் ஒரு குழுவை அமைத்து யா மொகிதீன் பிரியாணி கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒன்று, இரண்டு அல்ல 65 கிலோ கறி சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கோழி, ஆட்டு இறைச்சி கெட்டுபோகியிருந்தது.  பின்னர் அந்த கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட அதன் மீது பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, மாநகராட்சி குப்பை கொட்டும் கிடங்குக்கு எடுத்து செல்லப்பட்டு அவை அழிக்கப்பட்டன.

Biriyani

இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறும் போது, கெட்டுப்போன இறைச்சியை கண்டறிந்து அதனை அழித்து விட்டோம். அந்த கடைக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். மேலும்  பொதுமக்களும் உணவு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். உணவின் தரம் குறித்து சந்தேகம் எழுந்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.