திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறிய 67 வயது முதியவர் கைது!
கிருஷ்ணகிரி அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 67 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் பக்கத்து வீட்டில் 67 வயதான மணி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துக்கொண்ட முதியவர், சிறுமியிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
ஆனால், சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் முதியவர் மனைவி கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் முதியவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து, அதன் பின்னர் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்